இஸ்ரேலுக்கு இலங்கை ஊடகவியலாளர்கள் சென்றது தனிப்பட்ட பயணம் என்றும் அரசாங்கம் யாரையும் அனுப்பவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார் இஸ்ரேலுக்கு எதிராக இலங்கையில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் ஊடகவியலாளர்கள் இஸ்ரேலுக்கு அழைக்கப்பட்டமை விமர்சனங்களுக்கு உள்ளானது.
பல்வேறு நாடுகள் ஊடகவியலாளர்களை அழைப்பது வழக்கம் என்றும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார் இஸ்ரேலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்களின் மனநிலையை ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.






3 Comments