கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கல்வி மறுசீரமைப்புக் குறித்த உபகுழு, பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்.
இங்கு கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியினால் தயாரிக்கப்பட்ட பணித் திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் ஆறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்பில் இந்த டிஜிட்டல் மயப்படுத்தலை முன்னெடுப்பது குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.






3 Comments