மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில்.
மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட்குணபாலனின் தலைமையில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 அளவில் நினைவேந்தல் ஆரம்பித்ததுடன் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதோடு.
அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






3 Comments