Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் , விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து நுவரெலியாவில் இன்று (10) அரசுக்கு எதிராக நுவரெலியா விசேட பொருளாதார நிலையத்தினை மூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது இன்றைய தினம் வெளியில் தோட்டங்களுக்குச் சென்று மரக்கறி கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டு விவசாயிகள் முதலாளிமார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதியை உடனடியாக நிறுத்த கோரியும் விவசாயிகள் எதிர்நோக்கும் ஏராளமான பிரச்சனைகள் அடங்கிய பல்வேறு பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக நுவரெலியா பிரதான நகரை வலம் வந்து இறுதியில் நுவரெலியா - உடப்புசல்லாவா வீதியில் உள்ள விசேட பொருளாதார நிலையம் வரை சென்று நிறைவு செய்தனர்

இதன் போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் - வெளிநாட்டு உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர் இதன் விளைவு தெரியாத நுகர்வோர் அதனை கொள்வனவு செய்து உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நுவரெலியாவில் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து உருளைக்கிழங்கை உற்பத்தி செய்தாலும் அதன் விற்பனை விலை ஒரு கிலோ கிராம் 200 ரூபாய் தொடக்கம் 250 ரூபாய்க்கு மாத்திரம் விற்பனை செய்ய முடிகின்றது .

ஆனால் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ஒரு விவசாயி ஆரம்ப முதல் இறுதி வரை பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் 200 ரூபா செலவு செய்யப்படுகின்றது இவ்வாறு செலவு செய்தே உரிய விலை இல்லாமல் நாங்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

வெளிநாட்டு உருளைக்கிழங்கு பூச்சிகள் சேதப்படுத்தி நோய்களுக்கு உள்வாங்கப்பட்டே அது இலங்கைக்கு வருகின்றது இதன் காரணமாகவே அவற்றை 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் .

எனவே பொது மக்கள் விலை குறைவு என்ற காரணத்தால் அதிகம் வெளிநாட்டு உருளைக்கிழங்கவே அதிகம் கொள்வனவு செய்கின்றன இதன் காரணமாக நுவரெலியா உருளைக்கிழங்கு விற்பனை குறைந்து விலையும் குறைந்து வருகின்றனர் .

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அரசாங்கம் உரிய கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களுக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் வந்து போராடுவதற்கும் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தனர் .

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...