Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து – வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

புதிய இணைப்பு

அனுராதபுரம் – புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து அருகிலுள்ள வீட்டின் கூரையில் ஏறிய வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகளையும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

நேற்று (28) சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தில் சிக்கிக் கொண்டது.

முதலாம் இணைப்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ​​ஓயா அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியது.

அவர்களில் 34 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைகளுக்காக அனுமதி

பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடி காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியிருந்தனர்.

இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது.

மீட்புப் பணி

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...