Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி - ஹரிணி அமரசூரிய

திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு, தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதுடன், அதற்கேற்ப மாணவர்களை புதிய கல்வி முறைக்கு பழக்கப்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் அறிமுக வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பாடத் தெரிவுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதுவரை 7,181 பயிற்சியாளர்கள் மூலம் 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், புதிய பாடத் தொகுதிகள் தொடர்பான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...