Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கல்வி அமைச்சி பொறுப்பு கூற வேண்டும் - இராதாகிருஷ்ணன்

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு அடிப்படையில், தரம் 06 பாடநூலில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளறுபடிகள் ஏற்படுவதற்கு கல்வி அமைச்சின் பிழையான செயற்பாடுகளே காரணம் எனக் குறிப்பிட வேண்டும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதவி விலகியிருப்பது மட்டும் போதாது என்றும், இதற்கான முழுப் பொறுப்பையும் கல்வி அமைச்சே ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொட்டகலை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2022 முதல் 2024 வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், தானே தலைவராக செயல்பட்டதாக கூறினார்.

அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் கல்வி சீரமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவற்றை முழுமையாக புறந்தள்ளி, தற்போது புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு, மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக, இந்த கல்வி முறைமையை முழுமையாக எதிர்ப்பதாகவும், இதற்கான பொறுப்பை கல்வி அமைச்சே ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூர்ய, இந்த விவகாரம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனவும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...