2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இதற்கான பரிசீலனை முடிவுக்கு வர, இலங்கை மின்சார சபை தாக்கல் செய்த கோப்புகள் மற்றும் நிபுணர் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
மின்சார உற்பத்தி செலவுகள், வரவுகளும் செலவுகளும், நுகர்வோரின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தற்போதைய கட்டணங்களை அதேபடி தொடர்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனாலேயே பொதுமக்களுக்கு ஒரு அளவிற்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments