இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பாக, அந்த கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி பிறப்பித்துள்ளார்.
கப்பலின் மின்னஞ்சல் தகவல் அமைப்பு அகற்றப்பட்டிருந்ததாகவும், கப்பலில் எந்தவித ஆபத்தும் இல்லை என கூறப்பட்ட போதிலும், ஹார்பர் மாஸ்டரை தவறாக வழிநடத்தி கப்பலுக்கு துறைமுக நுழைவு அனுமதி பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இவ்விடயங்களை கருத்தில் கொண்டு நீதிவான் இந்த பயணத் தடை உத்தரவை வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகள் மட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளன என, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோன் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேலும், எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடயங்களை பரிசீலனை செய்த நீதிவான்,
இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.






3 Comments