Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் ஆலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகம் விசேட ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஆலோசனையில், சமூக ஊடகங்கள் மற்றும் சில குழுக்களின் மூலம் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு அவசர நிலை அல்லது சூழ்நிலையும் உருவானால், அதை கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஏதேனும் அவசர ஏவுகணைத் தாக்குதல் அல்லது தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெற்றால், முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் செயல்படுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தூதரக சேவை தொடர்பான அறிவிப்பு:
தைப்பொங்கல் பண்டிகை மற்றும் இஸ்ரேலிய அரசின் வார இறுதி விடுமுறை காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டால் தூதரகம் திறக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...