மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் வரக்காபொல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரக்காபொல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்கள் போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி ஓட்டிச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முன்னதாக திருடப்பட்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments