யாழ்ப்பாணம், வேலனை மற்றும் மானிப்பாய் பகுதிகளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழாக்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் டித்வா புயல் காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளதாகவும், முழு நாடும் ஸ்தம்பிதமடைந்ததாகவும் குறிப்பிட்டார். அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்த போதும், சிலர் அரசியல் லாபம் தேடும் நோக்கில் செயல்பட்டதாகவும், இலங்கை இனி மீண்டெழ முடியாது என்றும், தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க இயந்திரம் மந்தகதியில் இயங்குகின்றது எனவும், மீட்சி சாத்தியமற்றது எனவும் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால், நாட்டின் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெழுப்ப முன்வந்ததாகவும், முழு நாடும் ஒன்றாக இணைந்து உதவி திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் உதவிக்கரம் நீட்டியதுடன், பல உலக நாடுகளும் துணை நின்றதாக அமைச்சர் கூறினார்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” எனக் கூறப்படுவதுபோல், நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல வழி பிறக்க வேண்டும் என்பதற்காக நாம் பிரார்த்திக்கின்றோம். ஆனால், தை பிறந்தாலும் மக்களுக்கு வழி பிறக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் சிந்திப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும், தை பிறப்பதையும், இந்த நாட்டுக்கு வழி பிறப்பதையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அத்தகைய அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணையும் பட்சத்திலேயே நாட்டின் மீட்சி சாத்தியமாகும் என்றும், பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்றும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தனது உரையில் தெரிவித்தார்.
Â






3 Comments