Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எரிபொருள் விலை உயர்வு ஊழலின் நஷ்டத்தை மக்கள் மீது சுமத்துகிறது அரசாங்கம்!

எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார் .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விலையை உயர்த்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தெளிவற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றது எனவும் .

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததால்தான் விலையை உயர்த்தியதாக அரசாங்கம் காரணம் கூறுகிறது. ஆனால் விலை உயர்த்தப்பட்டு 24 முதல் 48 மணிநேரத்திற்குள் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கின்றது.

45 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு இருந்தால், ஏன் இவ்வளவு அவசரமாக விலையை உயர்த்த வேண்டும்..நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது இந்தச் சுமை அரசாங்கம் சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் .

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...