மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் போதிலும் இலங்கையில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறியுள்ளார் .
இலங்கையின் பிரதான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் போதிய அளவில் உள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார் அரிசி, கோதுமை மா, சீனி மற்றும் பருப்பு வகைகள் ஏற்கனவே கையிருப்பில் உள்ளன வெங்காயம், பருப்பு, மீன் டின் மற்றும் வாசனைத் திரவியங்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து தடையின்றி வந்துகொண்டிருக்கின்றன.
சீனி மற்றும் கடல் உணவுகள் மத்திய கிழக்கிலிருந்தும், பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன தற்போது எங்களிடம் போதிய இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன எனவே தட்டுப்பாடு அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. போர் இன்னும் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடித்தால் மட்டுமே நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் கப்பல்களையும் கணக்கில் கொண்டால் குறைந்தது ஒன்றரை மாதங்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் எனினும் தற்போதைய சூழலால் சரக்கு வருகையில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படலாம் என ஜனாதிபதி எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
அரசாங்கம் இருப்பு குறித்து உறுதி அளித்தாலும் சந்தையில் விலையேற்றம் குறித்த கவலைகள் எழுந்துள்ளனஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம், உள்ளூர் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே 5 வீதம் முதல் 10 வீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் வழி சரக்கு கட்டண உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் நீடித்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.
இது இலங்கையின் உணவு இறக்குமதியை நேரடியாகப் பாதிக்கக்கூடும் நிலைமை சீரடையாவிட்டால், சரக்குக் கட்டணங்கள் மேலும் உயரும் என்றும் அது நுகர்வோரை பாதிக்கும் என்றும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.






3 Comments