Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை !

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய 4 நிறுவனங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் சட்டப்பூர்வமாகத் தமது கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும் அதன் மூலம் ஊழியர்கள் தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என முகாமைத்துவம் தெளிவுபடுத்ததி உள்ள நிலையில் .

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...