Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பேராதனை பல்கலைக்கழக சூழலில் சிறுத்தைகளின் நடமாட்டம்!

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஹந்தானை மலைத்தொடரைச் சூழவுள்ள கிராமங்களில் அண்மைய நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க ஹந்தானை மலைப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் என்பது ஒரு தொடர்ச்சியான விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சிறுத்தைகள் மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவது கடினமான ஒன்றாகும். எனவே, அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக கிராம மக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வுகளை வழங்குவதில் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது" என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்தினுள் சிறுத்தைகள் நடமாடுவது உறுதிப்படுத்தப்பட்டதோடு, கால்நடை மருத்துவப் பண்ணையில் வளர்க்கப்பட்ட பசு மற்றும் நாய் என்பன சிறுத்தையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

பல்கலைக்கழக வட்டாரங்கள் வழங்கிய தகவலின்படி, தற்போது புதிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனினும், பாதுகாப்பு எச்சரிக்கைகள் இன்னும் நீக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது .

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளதோடு.

அதிகாலை, மாலைப் பொழுது மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும் வளாகத்திற்குள் நடமாடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் சிறுத்தைகள் தென்பட்டால் உடனடியாக பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...