கண்டி வேவெல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலை உரிமையாளருக்குச் சொந்தமான சிற்றூர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய இரு மாணவர்கள் சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






3 Comments