இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது .
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும் ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர்.
இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் அந்த மரணங்கள் 200 க்கும் குறைவாகக் குறைந்தன. 2026 ஆம் ஆண்டில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்நோய் அதிகளவில் பதிவாகியுள்ளது. குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அல்லது அவதான நிலைமைகள் காணப்படுமாயின் அங்கிருந்தும் நோயாளர்கள் பதிவாகின்றனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கோலித ஜயசுந்தர, எலி காய்ச்சல் அறிகுறிகள் குறித்தும் விளக்கமளித்தார்:






3 Comments