2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பதைக் அமெரிக்காவின் FBI மேற்கொண்ட விசாரணைகள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இந்த விடயத்தை குறிப்பிட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளிலும் சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலின் முக்கிய தலைவராக செயல்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், “ISIS-Sri Lanka” எனப்படும் பயங்கரவாத வலையமைப்பு இலங்கையில் இயங்கியதையும், அதன் சுய அறிவித்த தலைவராக சஹ்ரான் ஹாஷிம் இருந்ததாகவும் அமெரிக்க புலனாய்வு தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த குழு ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த ஐ.எஸ் அமைப்பின் தலைமைத்துடன் தொடர்பு வைத்திருந்ததுடன், அவர்களிடமிருந்து ஆதரவும் பெற்றிருந்ததாகவும் விசாரணைகள் கூறுகின்றன.
இந்நிலையில், தாக்குதலுக்கான இலக்குகளை வேறு சிலர் காட்டிக்கொடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தர்க்க ரீதியாக பொருந்தாதவை என்றும், அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்






3 Comments