Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை – ஓகஸ்டில் 100 புதிய பஸ்கள் சேவையில் !

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்த ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் தாழ்தள வசதி கொண்ட பிரத்தியேக பஸ்கள் அடுத்த மாதம் முதல் சேவையில் ஆரம்பிக்க உள்ளன.

முதற்கட்டமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் கொண்டு வரப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு மெட்ரோ பஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ளன. 33 ஆசனங்களைக் கொண்ட இப்பஸ்களில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணம் செய்ய முடியும். சக்கர நாற்காலிகள் பயணிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாக கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்படும். முக்கிய சுகாதார மையங்களையும் நேரடியாக இணைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்பு கொள்ளும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முன்னோடித் திட்ட வெற்றியை கருத்தில் கொண்டு, ஓகஸ்டில் மேலும் 100 பஸ்கள் நாட்டில் சேவையில் இணைக்கப்படவுள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...