Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

QR குறியீட்டு முறை மீண்டும் !

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உருவாகியுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே உருவாகியுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசைகளும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர, பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். QR குறியீட்டு முறை நடைமுறைக்கு வந்த பின்னர் ஒவ்வொரு வாகன வகைக்கும் ஏற்ப தேவையான அளவு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஆனால் பொதுமக்கள் காட்டும் அவசரமும் தேவையற்ற அச்சமும் காரணமாகவே எரிபொருள் நிலையங்களில் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் பேணுவதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிலர் தங்களுக்குத் தேவையான அளவை விட அதிகமாக எரிபொருள் பெற முயற்சிப்பதும் நெரிசலுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறிய அவர், யுத்த நிலைமை காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த முகாமைத்துவ முறையில் மக்கள் அமைதியாக செயல்பட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என வலியுறுத்தினார்.
எனவே, பொதுமக்கள் அமைதியுடன் ஒழுங்கை பேணிக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வீதி நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...