சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்து நுவரெலியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், காரை ஓட்டிய சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது வைத்தியப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Â
விபத்துக்குப் பின்னர் காயமடைந்த சாரதி டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலேயே அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Â
இந்த விபத்தில் சாரதி, ஒரு பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தற்போது சாரதி மட்டும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர் சாரதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Â
இந்த விபத்து கடந்த 13ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – மஸ்கெலியா சிவனொளிபாத மலை வீதியின் நோர்வூட், ரோக்வூட் பகுதியில் இடம்பெற்றது. யாத்திரையை முடித்து திரும்பும் போது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ரோக்வூட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.






3 Comments