பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அதே கடற்படையினரின் நடவடிக்கையில் போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை சற்று முன்னர் கண்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும்.
இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டு பிடித்துள்ள நிலையில்
இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.






3 Comments