Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அம்பலப்படுத்துவதாக உதய கம்மன்பில அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான 'மகா மூளையாளர்' யார் என்பது குறித்த இரகசியத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சுமார் ஒன்றரை வருட காலமாக தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் 'உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மகா மூளையாளர் தேடல்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூல் ஒன்றைச் தயாரித்துள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா மார்ச் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகம் இதன்போதுஅரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல முக்கிய உண்மைகளைத் தாம் பகிரங்கப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டது ஆட்சிகளை உருவாக்கவும் கவிழ்க்கவும் இது பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி இராணுவ வீரர்களை வேதனைப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...