இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது முக்கிய மின் உற்பத்தி மையமான நுரோச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பராமரிப்பு பின்னடைவு காரணமாக மின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார தேவைகள் ஏப்ரல் மாதம் அதிகரிக்கும் நிலையில், நுரோச்சோலை மின் நிலையத்தின் முழு திறன் பயன்படுத்தப்படாதது தேசிய மின்விநியோகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், மின் தட்டுப்பாடு நிலவினால் கட்டுப்படுத்தப்பட்ட மின்வெட்டு (power cuts) மீண்டும் அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மாற்று மின் உற்பத்தி வாய்ப்புகள் போதுமான அளவில் இல்லாததும் எரிபொருள் செலவுகள் உயர்வும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளன இதனை சமாளிக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வெட்டு தவிர்க்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






3 Comments