பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றின் மூலம் சட்டவிரோதமாக எரிபொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 லீட்டர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த எரிபொருள் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அட்டுலுகம பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments