நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அதன்படி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை சுற்றுலாக்கள் மற்றும் வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு சமீபத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து விபத்துகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக மாணவர்கள் குழுவாகப் பயணம் செய்யும் போது ஏற்படும் அபாயங்களை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் மேலும் பாடசாலை நிர்வாகங்கள் எந்தவொரு வெளியக நிகழ்வுகளையும் திட்டமிடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த புதிய கட்டுப்பாடுகள் எப்போது வரை அமலில் இருக்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






3 Comments