இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாத வகையில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அவசர எரிபொருள் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உலக சந்தையில் நிலவும் விலை மாற்றங்கள் மற்றும் விநியோக சிக்கல்களை கருத்தில் கொண்டு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதே இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட முக்கிய எரிபொருட்களை அவசர அடிப்படையில் இறக்குமதி செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் மின்சார உற்பத்தி, போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது அரசாங்கம் தொடர்ந்து நிலையை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments