Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தனியார் பேருந்துகளுக்கு புதிய எரிபொருள் நடைமுறை அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சுஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கவும் பொதுப் போக்குவரத்து சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 107 டிப்போக்களில்103 டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்து இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்து இந்த புதிய முறையின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது வாகனங்களின் பதிவு நிலையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது அந்தந்த மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளுடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பேருந்து உரிமையாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட அல்லது அருகிலுள்ள டிப்போக்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...