இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 487 ரூபாவாக உயர்த்தியுள்ளது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் புதிய விலை 572 ரூபாவாகும்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 443 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 455 ரூபாவாகவும், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 398 ரூபாவாகவும் காணப்படுகிறது லங்கா மண்ணெண்ணெய் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 255 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.






3 Comments