இஸ்ரேலின் திமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது, அதைக் காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்ததாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை தற்போது தூதரகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தூதரகம், இஸ்ரேலில் வசிக்கும் மற்ற இலங்கையர்கள் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படும் போது படப்பிடிப்புகள் செய்யாமல் உடனடியாக பாதுகாப்பான பதுங்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது.






3 Comments