நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் பாடசாலைகள் நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் வாரத்தில் நான்கு நாட்கள் பாடசாலைகளை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக வாரத்தின் புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
திட்டமிட்டபடி முதலாம் பாடசாலைத் தவணை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.






3 Comments