எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் மீது புதிய அழுத்தம் உருவாகியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண, மக்களுக்கு குறைந்தது ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட்-19 காலத்தில் வழங்கப்பட்ட உதவிகளைப் போலவே, தற்போதைய பொருளாதார சுமையையும் சமாளிக்க மக்களுக்கு உடனடி ஆதரவு தேவைப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அவர், “ஒற்றை நாட்களில் ஜனாதிபதியாகவும், ஜோடி நாட்களில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படுங்கள்” என சாடியுள்ளார்.
இந்நிலையில், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இந்த சூழலில், அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






3 Comments