Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அம்பாறையில் பேருந்து பணிப்பகிஷ்கரிப்பு பதற்றம் பயணிகள் அவதி !

பயணக் கட்டணத்தை அதிகரிக்க கோரி தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பால், அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று பதற்றமான சூழல் நிலவியது.

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலகியதால், குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இடையிடையே சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறையிலிருந்து கொழும்பு, கண்டி, அனுராதபுரம், கேகாலை உள்ளிட்ட தூரப் பகுதிகளுக்கான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்பட முயன்றபோது, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த மற்ற பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் அதனை வழிமறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணிப்பகிஷ்கரிப்பை பின்பற்றாமல் பேருந்தை இயக்க முயன்றதாக குற்றம் சாட்டி, அந்த பேருந்தின் சாரதியை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமை சுமுகமாகியுள்ளது. எனினும், தனியார் பேருந்து பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்துவருகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...