இலங்கையின் மத்தள ராஜபக்ஸா சர்வதேச விமான நிலையம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களின் பின்னணியில், எமிரேட்ஸ், கட்டார் ஏர்வேய்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேய்ஸ் ஆகிய மூன்று முக்கிய வளைகுடா விமான நிறுவனங்கள், இந்த விமான நிலையத்தை தற்காலிக மையமாக பயன்படுத்த அனுமதி கோரியுள்ளன.
மத்திய கிழக்கிலுள்ள சில விமான நிலையங்கள் செயலிழந்துள்ள நிலையில் மாற்று மையம் தேவைப்பட்டதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது ஆனால், இதுகுறித்து இலங்கை அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சும் சம்பந்தப்பட்ட தூதரகங்களும் இந்த கோரிக்கையை ஆய்வு செய்து வருகின்றன.
மத்தள விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளதால் பெரிய விமானங்களை தரையிறக்க முடியும். இருப்பினும், நீண்ட தூர சேவைகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், பொறியியல் ஆதரவு மற்றும் உணவு வழங்கல் சேவைகள் தற்போது குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விமான நிலையம், தற்போது குறைந்தளவு சேவைகளுடன் இயங்கி வருகிறது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்தள விமான நிலையம் ஒரு முக்கிய சர்வதேச விமான மையமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
Â






3 Comments