Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மரக்கறி விற்பனையில் கடும் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் மரக்கறிகளுக்கான கேள்வி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் வீதிகளில் ஓடும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் பொதுப் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனால் நுகர்வோர் சந்தைகளுக்கு வந்து மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேனகூறியுள்ளார்.

அன்றாட வருமானம் ஈட்டும் தரப்பினர் போக்குவரத்து முடக்கத்தால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் இது மக்களிடையே மரக்கறிகளை வாங்கும் திறனைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நெருக்கடி தொடருமானால் விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்வதில் தட்டுப்பாடு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.

விவசாயிகள் மரக்கறி பயிர்ச்செய்கையை நிறுத்தினால் எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு சந்தையில் மரக்கறிகளே இல்லாத நிலை உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...