அரச மற்றும் தனியார் விநியோகத்தர்களின் திட்டமிடப்பட்ட கப்பல் வருகைகளின் அடிப்படையில் எதிர்வரும் மாதங்களில் திரவ பெற்றோலிய எரிவாயு இருப்பு போதுமானதாக இருக்கும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மார்ச் 28ஆம் திகதி 22,000 மெட்ரிக் தொன் எரிவாயுவையும் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மேலும் 22,000 மெட்ரிக் தொன் எரிவாயுவையும் எதிர்பார்க்கிறது என கூறியுள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மார்ச் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் 8,000 மெட்ரிக் தொன்களையும் ஏப்ரல் 25 முதல் 27 காலப்பகுதியில் 21,000 மெட்ரிக் தொன்களையும் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு சந்தைக்கு மாதத்திற்கு 7,000 முதல் 8,000 மெட்ரிக் தொன் வரை விநியோகிக்கிற நிலையில்.
இரு நிறுவனங்களினதும் மொத்த விநியோகம் நாட்டின் தேவையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.






3 Comments