Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தொடரூந்து கட்டணம் குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்.

தொடரூந்து கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க வேண்டாம் என இலங்கை தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் பேருந்து கட்டண உயர்வு காரணமாக பெருமளவிலான மக்கள் தற்போது தொடரூந்து போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு போர் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை இலங்கையிலும் போக்குவரத்து மற்றும் சேவைக்கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய விசேட பொறுப்பு தொடரூந்து திணைக்களத்திற்கு உள்ளது எனச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தொடரூந்து சேவையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதியிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டான சூழலில் தொடரூந்து கட்டணங்களை உயர்த்துவது பொதுமக்களை மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் என சங்கம் எச்சரித்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...