சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவொன்று இன்று (மார்ச் 26) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த குழு, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்யும் நோக்கில், கொள்கை கலந்துரையாடல்களை நடத்தும் பணிக்காக ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கொசாக் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழு இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கு மோதலின் பொருளாதார தாக்கங்களைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. குழு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வாறு சிறந்த ஆதரவளிக்க முடியும் என்பது பற்றிய புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டையும் செய்யும் என்று ஜூலி கொசாக் தெரிவித்தார்.
ஐந்தாவது மதிப்பாய்வுக்கான ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் அக்டோபர் 9, 2025 அன்று எட்டப்பட்டது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியின் ஆதரவுடன் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை முடிக்க, ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் பொருளாதாரக் கொள்கைகளில் உடன்படிக்கை அடைந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இந்த மீளாய்வை அங்கீகரித்தால், இலங்கைக்கு சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும்.
மேலும், டிட்வா சூறாவளியின் பொருளாதார தாக்கம் மற்றும் உலகளாவிய தேவையை மாற்றியமைத்தல் காரணமாக, ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், IMF வருகை ஆறாவது தவணை மறுஆய்வு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments