நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது சுமார் 45 இலட்சம் பேரின் வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் இந்த துறை வீழ்ச்சியடைந்தால் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனும் முடங்கி குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என கூறியுள்ளார்.
வங்கிக் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிறுவனங்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் பரேட் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள வணிகங்களுக்காக விசேட கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான விசேட பொருளாதாரப் பொதியொன்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.






3 Comments