கடற்றொழில் படகுகள், கடல் உணவுப் பதப்படுத்தல் மற்றும் நீரியல் வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபடும் நபர்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விநியோக தாமதங்களை சமாளிக்க புதிய அவசர உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் அல்லது தொடர்புடைய குறைகளை *011 4 323 389* என்ற இலக்கத்தின் மூலம் எந்நேரமும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோரின் தினசரி செயல்பாடுகளை சீராக முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments