Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க இந்தியாவுடன் கைகோர்க்கும் இலங்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தணிக்க இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அவசர உதவி கிடைக்கப்பெறுள்ளது.

இந்தக் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கியுள்ளன இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மூலம் இந்த அவசர விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே தொலைபேசி வாயிலாக கடந்த 24ஆம் திகதியன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இது தொடர்பாக மார்ச் 23ஆம் திகதியன்று ஆலோசனைகளை நடத்தினர்.

மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளைப் பெற லங்கா ஐஓசி முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தடங்கல் காரணமாக அந்த விநியோகஸ்தர்கள் தவிர்க்க முடியாத சூழலை சுட்டிக்காட்டி விநியோகத்தை இடைநிறுத்தினர் இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவே இந்தியாவிடம் அவசர உதவி கோரப்பட்டது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...