Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

புத்தாண்டு காலத்தில் கோழி இறைச்சி விநியோகம் குறித்து விளக்கம்!

புத்தாண்டு காலத்தில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் அபாயம் காணப்பட்டபோதிலும் அதனை 1,250 ரூபாய் விலையில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.

உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் ஏப்ரல் மாதமாகும் போது அனைத்து பண்ணைகளும் தமது அதிகபட்ச கொள்ளளவிற்கு உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில்.

தட்டுப்பாடின்றி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதே எமது முயற்சியாக இருந்தது ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டினால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.

அந்தச் செலவை நாம் சுமக்க வேண்டியுள்ளது எனவே கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் போது அதற்கேற்ப விநியோகிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே விலை மாற்றமடையும் விலையை நாங்களல்ல சந்தையே தீர்மானிக்கிறது.

விநியோகத்தை தட்டுப்பாடின்றி வழங்கவே நாம் எதிர்பார்க்கிறோம் ஏனெனில் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயர்வு போன்ற நிலைமைகள் உருவாகலாம்.

திடீரென டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் வருங்கால நிலைமை குறித்து எம்மால் எதுவும் கூற முடியாது என தெரிவித்தவுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...