எரிபொருள் விலை அதிகரிப்பைச் சாட்டாக வைத்து சந்தையில் பருப்பு மற்றும் நெத்திலி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரித்துள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில் மொத்த மற்றும் சில்லறை சந்தையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
ஒரு கிலோகிராம் பருப்பு சுமார் 350 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் நெத்திலி 1,300 ரூபாவைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதர அத்தியாவசியப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் சிவப்பு வெங்காயத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சுப்பிரமணியம் இது குறித்துக் கூறுகையில்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும் இடைத்தரகர்களே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மார்ச் மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளன ஏப்ரல் முதல் வாரத்தில் பருப்பு விலை மீண்டும் 265 - 270 ரூபா வரை குறையும்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிகபட்சம் 20 ரூபா மட்டுமே மாற்றம் ஏற்படலாம் என குறிப்பிட்டார்.






3 Comments