Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

நீர் கட்டணம் அதிகரிப்பு குறித்து விளக்கம்!

மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வழக்கமாக வருடத்தில் இருமுறை மட்டுமே கட்டணத் திருத்தங்கள் குறித்து ஆராயப்படும் என சபையின் தலைவர் சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு அம்பத்தலேயில் மேலதிகமாக 50,000 கன மீற்றர் உற்பத்தி நிலையமும் களு கங்கைத் திட்டத்தின் கீழ் 136,000 கன மீற்றர் நிலையமும் அமைக்கப்படவுள்ளன.

இவை நிறைவடைய 3 ஆண்டுகள் வரை எடுக்கும் வறட்சி நீடித்தால் நீர் விநியோகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என எச்சரித்துள்ள்ளார்.

தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் வலியுறுறுத்தியுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...