Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எரிபொருள் மானியம் தொடரும்: IMF இதுவரை எதிர்ப்பு இல்லை – எரிசக்தி அமைச்சு !

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, டீசல் மற்றும் பெட்ரோல் மீதான தற்போதைய மானிய விலையிலேயே விநியோகம் தொடரவுள்ளது.

தற்போதைய மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு IMF அனுமதி வழங்கியுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால, “தற்போதைய ஏற்பாட்டை நாம் தொடர முடியும்; இதற்கு IMF இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, எரிபொருள் விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மாதம் சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் இறக்குமதிக்கான முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆண்டுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் செலவாகும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வரை இந்த மானிய முறையைத் தொடர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இதை நீடிப்பதா என்பது மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மற்றும் IMF இன் இறுதி நிலைப்பாட்டைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை IMF அனுமதி கிடைக்காவிட்டால், தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள மானியத் தொகை நேரடியாக எரிபொருள் விலைகளில் சேர்க்கப்பட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...