2026 ஆம் ஆண்டிற்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 30, 2026 வரை ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சை ஆகஸ்ட் 9, 2026 – ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்: onlineexams.gov.lk/eic.
விண்ணப்ப முடிவு நேரம்: ஏப்ரல் 30, இரவு 12.00 மணி. காலக்கெடு கடந்த பின்னர் எந்த விண்ணப்பமும் ஏற்கப்படமாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகள் மற்றும் முழு தகவல்களும் அதே இணையதளத்தில் கிடைக்கின்றன. உதவி தேவைப்பட்டால் திணைக்களம் வழங்கிய ஹாட்லைன் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான அறிவிப்பாகும்.






3 Comments