இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள தகவலின்படி எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இதுகுறித்து அதன் மேலாண்மை பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்ததாவது, குறித்த கப்பலில் 32,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 8,000 மெட்ரிக் டொன் ஜெட் A-1 (Jet A-1) வானூர்தி எரிபொருள் கொண்டு வரப்படவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோக முறை தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ஒற்றை எண் திகதிகளாக இருப்பதால் நாளைய விநியோக முறை குறித்து இன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
மேலும், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளும் முறை தொடர்ந்து அமலில் உள்ளது. அதன்படி 0, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்களில் முடியும் வாகனங்களுக்கு இரட்டை எண் திகதிகளில் 1, 3, 5, 7, 9 ஆகிய இலக்கங்களில் முடியும் வாகனங்களுக்கு ஒற்றை எண் திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும்.






3 Comments