இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பின்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட அனைத்து வாகனங்களும் இன்றைய தினம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.
வழமையான நடைமுறையின்படி மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய தினங்கள் தொடர்ந்து ஒற்றை எண்களாக அமைகின்றன. இதனால் இரட்டை இலக்கத்தைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் மட்டும் அனைத்து வாகனங்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்திர கியூஆர் ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சலுகை இன்றைய தினத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் என்றும், அதற்கு அடுத்த நாட்களிலிருந்து வழமையான ஒற்றை-இரட்டை முறை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






3 Comments