Â
திக்கோவிட்ட நெடுநாள் கடற்றொழில் படகிலிருந்து மீட்கப்பட்ட சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின், 6 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடையது என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் 19 பைகளில் இருந்ததையும், அது ஹெரோயின் என்பதையும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் தென்மேற்கே ஆழ்கடலில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்த படகு இன்று (01) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார்.






3 Comments